

டி20 உலகக்கோப்பையில் ஆடுவதற்காக டிவில்லியர்ஸிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டுப்ளேசிஸ் சூசகமாகத் தெரிவித்தார்.
“மக்கள் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆட வேண்டும் என்று விரும்புகின்றனர், நானும் கூட விரும்புகிறேன். இது குறித்த பேச்சுவார்த்தைகள் 2-3 மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன. இது எந்தவிதத்தில் சாத்தியம், எப்படி முடியும் என்பதைப் பொறுத்து இது குறித்த முடிவு வரும்.
அடுத்த டி20 தொடர் ஆரம்பிப்பதற்குள் இது குறித்து ஒரு முடிவு எட்டப்படும் என்று நம்பலாம்” என்றார்.
ஏற்கெனவே 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆட டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர் ஓய்வு பெற்று கொஞ்ச காலம் கூடுதலாகி விட்டதால் அவரை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டினர்.
இப்போது மார்க் பவுச்சர் பயிற்சியாளராகவும் கிரேம் ஸ்மித் இயக்குநராகவும் இருப்பதை அடுத்து பல நம்பிக்கையான விஷயங்கள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நடைபெற்று வருகின்றன.