Published : 17 Dec 2019 04:21 PM
Last Updated : 17 Dec 2019 04:21 PM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணியில்     6 புதுமுக வீரர்கள்

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ம் தேதி இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் முதல் 2 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் டேன் பேட்டர்சன், பியுரன் ஹென்றிக்ஸ், பேட்ஸ்மென் பீட்டர் மலான், ரஸி வான் டெர் டியூஸன், ஆல்ரவுண்டர் டிவைன் பிரிடோரியஸ், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரூடி செகண்ட் ஆகியோர் இந்த தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரூடி செகண்ட் சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் ஏதோ காரணத்தினால் விலகினார். அதன் பிறகு இப்போது இங்கிலாந்துக்கு எதிராக இன்னொரு வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3ம் தேதி முதல் டெஸ்டெ போட்டி செஞ்சூரியனில் தொடங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, வியான் முல்டர் உடல்தகுதி பெறவில்லை என்பதால் அணியில் இடம்பெறவில்லை.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி:

ஃபாப் டு பிளேசிஸ் (கேப்டன்), தெம்பா பவுமா, குவிண்டன் டி காக், டீன் எல்கர், பியூரன் ஹென்றிக்ஸ், கேசவ் மஹராஜ், பீட்டர் மலான், எய்டன் மார்க்ரம், ஜுபைர் ஹம்சா, ஆன்ரிச் நோர்ட்யே, டேன் பேட்டர்சன், அண்டில் பெலுக்வயோ, வெர்னன் பிலாண்டர், டிவைன் பிரிடோரியஸ், கேகிசோ ரபாடா, ரூடி செகண்ட், ராஸி வான் டெர் டியூஸன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x