

சர்வதேச கிரிக்கெட்டில் இயல்பான ஆட்டத்தை விட சூழ்நிலைக்கு தகுந்தபடியே விளையாட வேண்டி உள்ளது என்பதை தான் உணர்ந்து கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தெரிவித்தார்.
முக்கியமான சந்தர்ப்பங்களில் பொறுப்பற்ற ஷாட் மேற்கொள்ளுதல், மென்மையான முறையில் ஆட்டமிழப்புக்கு வழிவகுப்பது, விக்கெட் கீப்பிங் பணியில் கவனக் குறைவு ஆகியவற்றால் சமீபத்தில் விவாதப் பொருளாக மாறியிருந் தார் ரிஷப் பந்த். இது ஒரு வகையில் இந்திய அணிக்கு கவலை அளிக் கும் விஷயமாகவும் உருப்பெற்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் தற்போது முடிவு கட்டியுள்ளார் 22 வயதான ரிஷப் பந்த். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்த ரிஷப் பந்த் 69 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து சிறந்த பங்களிப்பை வழங் கினார். இந்த ஆட்டத்தில் விரை வாக 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவியிருந்தார்.
எனினும் அவரது ஆட்டத்துக்கு பலன் இல்லாமல் போனது. 288 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது சிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப் ஆகியோரது அதிரடியால் 13 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆட்டம் முடிவடைந்ததும் ரிஷப் பந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
சர்வதேச அளவிலான கிரிக்கெட் என்பது ஆரம்ப நிலையில் விளையா டும் ஆட்டம் போன்றது இல்லை என்பதை உணர்ந்துள்ளேன். இங்கு இயல்பான ஆட்டம் போன்றது ஏதும் இல்லை. சர்வதேச அள வில் சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாட வேண்டும் அல்லது அணியின் தேவையை உணர்ந்து விளையாட வேண்டும்.
அணி வெற்றி பெற உதவ வேண்டுமானால் சிறப்பாக ரன்கள் சேர்க்க வேண்டும். இதில்தான் கவனம் செலுத்தினேன். இறுதியில் சில ரன்களும் கிடைத்தது. ஒரு தனிநபராகவும், விளையாட்டு வீரரா கவும் நான் எனது செயல்முறை களில் கவனம் செலுத்த உள்ளேன்.
இந்திய அணிக்காக நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமானதுதான். ஒரு இளம் வீரராக ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சில நேரங்களில் ரசிகர்களின் ஆதரவு முக்கியமானதுதான்.
ஒவ்வொரு நாளும் என்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய் தேன். ஆனால் அது நிகழவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறேன். அணி நிர்வாகத்திடம் நான் பேசும்போது அவர்கள் என்னிடம் கூறியது ஒன்று தான், அமைதியாக செயல்படு, ஆட்டத் திறமை, உடற் தகுதியை மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பதை பாருங் கள், எல்லா வழியிலும் மேம்படுத் திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கூறினார்கள். இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.