சச்சினுக்கு ஆலோசனை கூறிய ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு: சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தகவல்

தாஜ் ஹோட்டல் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட படம்.
தாஜ் ஹோட்டல் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட படம்.
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது ட்விட் டர் பக்கத்தில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது தாஜ் கோரமண்டல் ஓட்டலின் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கை காப்பு குறித்து ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

அந்த ஊழியரை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டு பிடிக்க இணையதள வாசிகள் அனைவரும் உதவ வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். ஆங் கிலம், தமிழ் ஆகிய இரு மொழி களிலும் அவர் இதனை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சச்சின் தேடுபவர் சென்னை பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்த குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது. குருபிரசாத் கூறும்போது, ‘‘சச்சின் டெண்டுல்கர் என்னை சந்திக்க விரும்பியது மிக வும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2001-ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி யின்போது சச்சினுக்கு நான் ஆலோ சனை கூறியது எனது வாழ்க்கை யில் மறக்க முடியாத தருணமாகும்.

சச்சினை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கச் சென்றபோது ஒரு ஆலோசனை கூறலாமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் சரி என்றார். அவர் அணியும் முழங்கை தடுப்புறை பற்றி ஆலோசனை கூறினேன். அதைக் கேட்டதும் எனது ஆட்டத்தை அவ்வளவு உன்னிப்பாக கவனிப்பீர்களா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். நான் அவருக்கு ஆலோசனை கூறிய தாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் யாரிடமும் சொல்லவில்லை.

18 ஆண்டுகள் கழித்து இதை அவர் நினைவு கூர்ந் திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை சந்திக்க ஆவ லாகக் காத்திருக்கிறேன். அவர் எனது வீட்டுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சச்சி னின் ட்விட்டுக்கு பதில் அளித் தேன். அவரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை” என்றார்.

இதற்கிடையே சச்சினின் கோரிக்கையை ஏற்று தாஜ் ஓட்டல் நிர்வாகம் ட்விட் செய்துள்ளது. அதில், “சென்னையில் எங்கள் ஓட்ட லில் தங்கியிருந்த போது எங்களு டைய ஊழியருடன் ஏற்பட்ட அனு பவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் தேடும் நபரை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். உங்கள் இருவரையும் சந்திக்க வைப்பதில் மகிழ்ச்சி அடைவோம்” என தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வேலைபார்க்கும் வேறொருவர், தாம் தான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து ஆலோ சனை வழங்கியதாகக் கூறியதாக தகவல் ஒன்று வெளியானது. அது குறித்து விசாரித்தபோது, சச்சின் டெண்டுல்கரை அவர் சந்திக்க வில்லை என்பது தெரியவந்தது. மேலும் சச்சினை குருபிரசாத் சந்தித் தது தொடர்பான புகைப்பட ஆதார மும் வெளியானது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in