Last Updated : 16 Dec, 2019 06:56 AM

 

Published : 16 Dec 2019 06:56 AM
Last Updated : 16 Dec 2019 06:56 AM

கோலியின் ஆச்சர்யத்துக்கு விடை கிடைத்ததா? ஹெட்மயர், ஹோப் மிரட்டல் சதத்தால் மே.இ.தீவுகள் அபாரவெற்றி; இந்திய அணியில் வெற்றிடம் நிரப்பப்படுமா?

ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய் ஹோப் ஆகியோரின் மிரட்டலான சதத்தால் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பகலிரவாக நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள் அணி.

மிக நீண்டகாலத்துக்குப்பின் ேம.இ.தீவுகள் அணியிடம் இருந்து மிகச்சிறப்பான இன்னிங்ஸை நேற்று காண முடிந்தது. அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 106 பந்துகளில் 139 ரன்கள்(7சிக்ஸர்,11பவுண்டரி) சேர்த்து ஆட்டநாயகன் விருதுவென்றார். துணையாக ஆடிய ஹோப் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெற்றிடம்

தோனியின் கேப்டன்ஷிப் அனுபவ ஆலோசனை, பும்ராவின் பந்துவீச்சு ஆகியவை இல்லாத வெற்றிடம் இந்திய அணியில் நேற்று வெளிப்பட்டது. இந்திய அணியின் பல் இல்லாத பந்துவீச்சு, கோட்டைவிடும் பீல்டிங், கவனக்குறைவான பேட்டிங் போன்றவைதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை அரையிறுதிக்குப்பின் இந்திய அணியில் முதல் 3 வீரர்கள் அரைசதம் அடிக்காமல் நேற்றுதான் திரும்பியுள்ளார்கள்.

பதில் கிடைத்ததா

டாஸ் நிகழ்வுக்குப்பின் பேட்டி அளி்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சற்று தலைக்கனத்துடன் பேசுகையில் “ இந்த ஆடுகளத்தில் ஏன் பொலார்ட் டாஸ் வென்று பீல்டிங் எடுத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.நல்ல ஆடுகளம் பேட்டிங் எடுக்கலாமே, நாங்கள் முதலில் பேட் செய்வதில் மகிழ்ச்சியே” என்று பேசினார்.

கோலியின் வியப்புக்கும், சந்தேகத்துக்கும் ஹெட்மயர், ஹோப் பதில் அளித்துவிட்டா்கள். ஆடுகளம் ஒன்றுதான் இரு கேப்டன்களின் கணிப்பும் வெவ்வேறு, அதில் பொலார்டின் கணிப்பு வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியி்ல் மே.இ.தீவுகள் அணியின் 3-வது அதிபட்ச சேஸிங் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்சமாக சேஸிங் செய்யப்பட்ட ஸ்கோரும் இதுதான்.

நல்ல முன்னேற்றம்

மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரை நேற்று பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியது. பந்துவீச்சில் காட்ரெல், ஜோஸப் தொடக்கத்தில் அளித்த நெருக்கடியால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. பீல்டிங்கிலும் மே.இ.தீவுகள் அணியில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது.

பாடம் நடத்திய ஹெட்மெயர்

பேட்டிங்கைப் பொறுத்தவரை மெதுவான ஆடுகளத்தில் பந்துகளை எவ்வாறு அணுகி ஷாட்களை ஆடுவது குறித்து ஹெட்மயர் இந்திய வீரர்களுக்கு பாடமே நடத்திவிட்டார். ஹெட்மயரின் ஆட்டத்தில் 2 பவுண்டரிகள் மட்டுமே பேட் எட்ஜில் பட்டுச் சென்றது. மற்ற அனைத்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் “பிக் ஹிட்டிங் ஷாட்”களாகத்தான் இருந்தது. ஷமி, ஜடேஜா, துபே, ஜாதவ், ஆகியோரின் பந்துவீச்சை ஹெட்மயர் உரி்த்து எடுத்துவிட்டார். ஜடேஜா ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டன.

இவருக்கு உறுதுணயாக ஆடிய ஹோப்பும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 218 ரன்கள் சேர்த்தனர். ஹோப்புக்கு ரோஹித் சர்மா ஒருகேட்சை குல்தீப் பந்துவீச்சில் தவறவிட்டார், அதேபோல ஹெட்மயர் 106 சேர்த்திருந்தபோது ஸ்ரேயாஸ் அய்யர் ஒருகேட்சை தவறவிட்டார்.

இரு வாய்ப்புகளையும் இருவீரர்களும் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் ஹெட்மயருக்கு கேட்ச் நழுவவிடுவதற்கு முன்பே இந்திய அணிக்கு ஏராளமான சேதாரத்தை அவர் ஏற்படுத்தி இருந்தாார் என்பது குறிப்பிடத்தக்கது

பல் இல்லை

இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன்ஷிப்பில் அனுபவம் நிறைந்த தோனி இல்லாத வெற்றிடத்தை நேற்று உணர்ந்திருக்கும். 287 ரன்கள் அடித்தும் எதிரிணியை சுருட்ட முடியவில்லை, 2 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்த முடியவில்லை, நெருக்கடி கொடுக்க முடியவில்லை என்றால் பந்துவீச்சில் பிரச்சினையா, அல்லது கேப்டன்ஷிப்பில் பிரச்சினையா?

ஒருநாள் போட்டிகளில் இதுவரை தோனியின் நிழலில் கேப்டன்ஷிப்பை நடத்திவிட்ட கோலிக்கு இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் சிக்கிக் கொள்கிறார். அதுமட்டுமல்லாமல் வீரர்கள் தேர்விலும் இன்னும் பாரபட்சமான சூழல்தான் நிலவுகிறது.

ஜாதவ் தேர்வு?

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தபின் அணியில் இருந்து காணாமல் போன கேதார் ஜாதவ் இந்த போட்டியில் நேரடியாக விளையாடும் அணியில் இடம் பெற்றார்ர். இதற்கு முன் நடந்த பல்வேறு உள்ளூர் போட்டிகளில் ஜாதவ் விளையாடினாரா என்பதற்கு எந்தவிதமான அடையாளங்களும் இல்லை. மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.ஆனால், கேதார் ஜாதவுக்கு மட்டும் உடனடியாக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது எந்த அழுத்தத்தின் அடிப்படையில் எனத் தெரியவில்லை.

ஷிவம் துபேவை தொடக்கத்தில் களமிறக்கி அடிக்க வைத்திருக்க வேண்டும். அறிமுக வீராரான அவரை7-வது இடத்தில் களமிறக்கி வீணடித்துவிட்டார்கள். இந்திய அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் என்ற முறையில் துபே, கேதார் ஜாதவ் அணிக்குள் எடுத்தது கேள்விக் குறியாக இருக்கிறது.பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத வெற்றிடம் தெரிகிறது.

நடுப்பகுதியில் விக்கெட் இல்லை

50 ஓவர்கள் போட்டிகளில் நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்துவதுதான் லகுவாக எடுத்துச்செல்லும் என்பதை மறந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி திணறுகிறது. உமேஷ், நவ்தீப் சைனி, அஸ்வின் போன்றோரை நடுப்பகுதில் பயன்படுத்த ஏன் தவறுகிறார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சில் “பல் இல்லை”. ெஹட்மெயருக்கும், ஹோப்புக்கும் எந்தவிதத்திலும் இந்திய வீரர்களின் பந்துவீச்சு நேற்று நெருக்கடி தரவில்லை, ரன் சேர்க்க ஹெட்மெயர் திணறவில்லை. குல்தீப் யாதவ், சாஹர் பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். மற்றபடி அரைக்கை பந்துவீச்சாளர் ஜாதவ் பகுதிேநர பந்துவீச்சாளர் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது

நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடிய பந்துவீச்சாளர்கள் அவசியம். ரவிந்திர ஜடேஜா, துபே,குல்தீப் போன்றோர் அந்த பணியைச் செய்யவில்லை.

ஆறுதல்

இந்திய அணியில் ேநற்று நடந்த ஆறுதலான விஷயம் ஸ்ரேயாஸ் அய்யர்(71), ரிஷப்பந்த்(70) ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்ததுதான். இருவர் மட்டும் நேற்று களத்தில் நிற்கவில்லை என்றால், இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். மற்றவகையில் எந்தவிதத்திலும் மனநிறைவு இல்லை.

சிரிப்பு பறித்த ஷிம்ரன்

288 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணியில் ஹோப், அம்பிரிஸ் ஆட்டத்ததைத் தொடங்கினர். அம்பிரிஸ் 9 ரன்னில் சாஹர் பந்துவீ்ச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இந்த விக்கெட் வீழ்த்தியபோதுதான் இந்திய வீரர்கள் கடைசியாகச் சிரித்தனர். அதன்பின் நீண்டநேரம் சிரி்ப்பை மறந்துவிட்டனர்.

விளாசல்

அடுத்து 22 வயதான ஹெட்மயர் களமிறங்கி, ஹோப்புடன் சேர்ந்தார்.தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஹெட்மயர் அதிரடியாக பேட் செய்து, பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவி்ட்டார். 50 பந்துகளில் அரைசதம் அடித்தார், நிதானமாக பேட் செய்த ஹோப் 92 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்திய வீரர்களின் பந்துவீச்சு சொத்தையாக இருந்ததால், அடுத்த 35 பந்துகளில்50 ரன்கள் அடித்து 85 பந்துகளில் தனது 5-வது சதத்தையும் ஹெட்மயர் நிறைவு செய்தார். இந்திய அணிக்கு எதிராக ஹெட்மெயரின் 2-வது சதமாகும். அதன்பின் விளாசலில் ஈடுபட்ட ஹெட்மெயர் 139 ரன்கள் சேர்த்தபோது ஷமி பந்துவீச்சில் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் தேவைப்படும் ரன்களும்,பந்துகளும் சமமாகச் சென்றதால், ஆட்டம் பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்துவந்த பூரன், ஹோப்புடன் சேர்ந்து அதை எளிதாக்கினார். ஹோப் 149பந்துகளில் சதம் அடித்தார். பூரன் 29 ரன்களிலும், ஹோப் 102 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்தனர். 47.5 ஓவர்களில் 291 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வென்றது.

இந்திய அணி திணறல்

முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரைக்கும் ராகுல், ரோஹித் நல்லத் தொடக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் இருந்தார்கள். காட்ரெல் வீசிய 7-வது ஓவரில் ராகுல் 6 ரன்னில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கோலி ஒரு பவுண்டரி அடித்த நிலையில், காட்ரெல் பந்துவீச்சில் இன்சைடு எட்ஜ் எடுத்து போல்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. காட்ரெல் தனக்கே உரிய சல்யூட் அடித்து ராகுலையும், கோலியையும் அனுப்பினார். ஜோஸப் வீசிய 19-வது ஓவரில் மிட்விக்கெட்டில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்னில் ரோஹித் சர்மா வெளியேறினார்.

பொறுப்பான ஆட்டம்

4-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப் வந்த், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை மீட்டனர். அரைசதம் அடித்த இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அய்யர்(70), பந்த்(71) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுந்துவந்த ஜாதவ்(40), ஜடேஜா(21) ரன்களிலும், துபே 9 ரன்னிலும் வெளிேயறினர். 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புககு 287 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல், ஜோஸப், பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x