சென்னை ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்- அதிர்ச்சித் தேர்வு கேதார் ஜாதவ்

சென்னை ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்- அதிர்ச்சித் தேர்வு கேதார் ஜாதவ்
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்யும் வாய்ப்பைப் பெற்றது.

இந்திய அணியில் மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால், சாஹல் ஆகியோர் இல்லை. எங்கிருந்தோ கேதார் ஜாதவ்வை தேர்வு செய்துள்ளனர், இது எப்படி என்று தெரியவில்லை, ஆகவே மே.இ.தீவுகளின் பிக் ஹிட்டர்கள் முன்னிலையில் இவர் தனது அரைக்கை பந்து வீச்சை வீசுவாரா என்று பார்க்க வேண்டும்.

இந்திய அணி: ரோஹித், ராகுல், கோலி, அய்யர், பந்த், ஜாதவ், துபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ஷமி

மே.இ.தீவுகள் அணி: ஹோப், அம்ப்ரிஸ், ஹெட்மையர், பூரன், சேஸ், பொலார்ட், ஹோல்டர், கீமோ பால், ஹெய்டன் வால்ஷ், அல்ஸாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in