

முதலில் பேட்டிங் செய்தால் பயம் இருக்கக்கூடாது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ரிஷப் பந்த் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதிப் பதற்கு காரணம் அவரிடம் அபரிமிதமான திறமைகள் இருப்பதுதான். குறிப்பிடத்தக்க தரம் மற்றும் வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய காரணியாக அவர் இருப்பார் என நம்புகிறோம்.
ரிஷப் பந்த் ஒருமுறை ரன்கள் சேர்க்க தொடங்கி விட்டால் அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுப் பார். இலக்குகளை துரத்தும் போது இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அதேவேளையில் முதலில் பேட்டிங் செய்தால் வேறுவிதமான அச்சமின்மை தேவை. நாங்கள் இலக்குகளை துரத்தும்போது எதை அடைய வேண்டும் என் பதை அறிந்திருப்பதால் எங்களது திட்டங்களை சரியாக திட்டமிடு கிறோம். மும்பை டி 20 ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட் செய்த விதம் அனைத்தையும் பூர்த்தி செய்தது. அதை அப்படியே தொடர்வதை எதிர்நோக்குகிறோம்” என்றார்.