ஒருநாள் போட்டி தரவரிசை: டாப்-10-ல் கோலி, தவண், தோனி, அஸ்வின்

ஒருநாள் போட்டி தரவரிசை: டாப்-10-ல் கோலி, தவண், தோனி, அஸ்வின்
Updated on
1 min read

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பேட்டிங் தரவரிசையில் டாப்-10-ல் விராட் கோலி, ஷிகர் தவண், தோனி, ஆகியோர் உள்ளனர். கோலி 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பவுலிங் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஷிகர் தவன் 7-ம் இடத்தையும் ஒருநாள் அணி கேப்டன் தோனி 9-ம் இடத்தையும் தக்கவைத்துள்ளனர். வழக்கம் போல் நம்பர் 1 இடத்தில் அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸே நீடிக்கிறார்.

பந்துவீச்சு தரவரிசையீல் இந்தியாவின் ஒரே பிரதிநித்துவமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் உலகக் கோப்பையின் போது நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் இம்ரான் தாஹிர் இருக்கிறார். இவர் நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதையடுத்து 3 இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பிடித்துள்ளார்.

நியூஸிலாந்தை ஒருநாள் தொடரில் 2-1 என்று வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. இந்தியா 2-ம் இடத்தை தக்கவைத்துள்ளது. நியூஸிலாந்து 4-ம் இடத்துக்குச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in