

நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பெர்த் நகரில் முதல் டெஸ்ட் போட்டியில் பகலிரவு ஆட்டத்தை ஆடிவருகிறது. இதில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் தொடங்கியபோது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்தினால் வெளியேறினார்.
அவர் இந்த டெஸ்ட் போட்டியில் மேலும் விளையாட முடியாது என்பதோடு இந்த சீசனில் நடைபெறும் எந்த டெஸ்ட் போட்டியையும் ஆட முடியாது, குறிப்பாக இந்தத் தொடர் முழுதும் அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் முக்கிய பந்துவீச்சாளர் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு இந்தத் தொடரில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பதிலாக ஜேம்ஸ் பேட்டின்சன் இருக்கிறார் என்றாலும் அவரும் காயத்திற்கு அடிக்கடி இலக்காகக் கூடியவர்தான், மேலும் ஆஸி. பிட்ச்களில் ஹேசில்வுட் ஒரு ஜூனிய மெக்ராவாகவே பார்க்கப்படுகிறார்.
இடது பின் தொடையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்கேனில் தெரியவந்துள்ளது. அவர் இல்லாததையடுத்து ஆஸி. அணி முதல் டெஸ்ட் போட்டியில் கமின்ஸ், ஸ்டார்க்கை வைத்தே வேகப்பந்து வீச்சை முடிக்க வேண்டும். மேலும் லயன் இருக்கிறார். லபுஷேன் இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி தற்போது ஒன்று ஜேம்ஸ் பேட்டின்சனைத் தேர்வு செய்ய வேண்டும், இல்லையேல் மைக்கேல் நீஸர் என்பவரை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் காயம் குறித்து ஹேசில்வுட் கூறும் போது, 2 வாரங்களில் சரியாகி விடும் போல் தெரிகிறது, சிறிய காயம்தான் என்று தன்னம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜீத் ராவல் விக்கெட்டை அருமையான இன்ஸ்விங்கர் மூலம் வீழ்த்தினார் ஹேசில்வுட்.