

விளையாட்டுத் துறையில் தலைசிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு இந்திய மல்யுத்த பயிற்சியாளர் அனூப் சிங், பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் நாவல் சிங் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2011 முதல் 2014 வரையிலான காலத்தில் அனூப் சிங், நாவல் சிங் ஆகியோர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவரும், சர்வதேச மல்யுத்த வீரருமான அனூப் சிங்கிடம் பயிற்சி பெற்ற சுஷீல் குமார், யோகேஷ்வர் தத், சத்யவர்த், பஜ்ரங் உள்ளிட்ட 58 மல்யுத்த வீரர்கள் பெரிய அளவில் சாதித்துள்ளனர்.
நிகார் அமின் (நீச்சல்), எஸ்.ஆர்.சிங் (குத்துச்சண்டை), ஹர்பன்ஸ் சிங் (தடகளம்), ரோமியோ ஜேம்ஸ் (ஹாக்கி), சிவ பிரகாஷ் மிஸ்ரா (டென்னிஸ்), டிபிபி நாயர் (வாலிபால்) ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்களுக்காக வழங் கப்படும் தயான் சந்த் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.