Published : 13 Dec 2019 09:03 PM
Last Updated : 13 Dec 2019 09:03 PM

ஐபிஎல்2020 ஏலம்: உச்ச அடிப்படை விலையைத் தொட்ட 40 வீரர்கள் யார்? 8 அணிகளின் கையிருப்பு எவ்வளவு?

கிளென் மேக்ஸ்வெல்: கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதில் பங்கேற்கும் 332 வீரர்களின் அதிக விலை உள்ள வீரர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2020-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் இந்த முறை முதல் முறையாக வரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் ஏலத்துக்காக வெளிநாடு, உள்நாடு என மொத்தம் 971 வீரர்கள் தங்களைப் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் 332 பேர் மட்டுமே ஏலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஐபிஎல் போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் உடைய 19 இந்திய வீரர்கள், 24 புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மே.இ.தீவுகள் கேஸ்ரிக் வில்லியம்ஸ், வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ஆஸி, சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆகியோர் முதல் முறையாக இடம் பெறுகிறார்கள். 8 அணிகளிலும் தற்போது 73 வீரர்களுக்கான காலியிடங்கள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள்

இவர்களில் 123 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் மட்டும் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்களின் அடிப்படை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி அடிப்படை விலை
பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், கிறிஸ் லின், மிட்ஷெல் மார்ஷ், மேக்ஸ்வெல், டேல் ஸ்டெயின், மாத்யூஸ் ஆகியோருக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

ரூ.1.5 கோடி அடிப்படை விலை
எயின் மோர்கன், ஜேஸன் ராய், ராபின் உத்தப்பா, கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லே, கான் ரிச்சார்ட்ஸன், கெயில் அபாட் உள்ளிட்டோருக்கு அடிப்படைவிலை ரூ.1.5 கோடியாகும்.

ரூ.ஒரு கோடி அடிப்படை விலை
ஆரோன் பிஞ்ச், சாம் கரன், யூசுப் பதான், நாதன் கோல்டர் நீல், டாம் பான்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், ரிலி ரோஷோ, ஆன்ட்ரூ டை, ஜெயதேவ் உனத்கத், முஷ்தபிசுர் ரஹ்மான், டாம் கரன், ஆஷ்டன் அகர், ஹென்ரிக்ஸ், ஆர்கே ஷார்ட், ஜேம்ஸ் பட்டின்ஸன், லியாம்பிளங்கட், திசாரா பெரேரா,யூசுப் பதான், பியஷ் சாவ்லா ஆகியோருக்கு அடிப்படை விலை ரூ.ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அணிகளின் கைவசம் இருக்கும் தொகை

  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரூ.42.70 கோடி
  • டெல்லி கேபிடல்ஸ்- ரூ.27.85 கோடி
  • கொல்கத்தா அணி- ரூ.35.65 கோடி
  • சன்ரைசர்ஸ் அணி - ரூ.17 கோடி
  • ராஜஸ்தான் அணி - ரூ.28.90 கோடி
  • சிஎஸ்கே அணி - ரூ.14.60 கோடி
  • ஆர்சிபி அணி - ரூ.27.90 கோடி
  • மும்பை இந்தியன்ஸ் - ரூ.13.05 கோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x