‘நான் அவன் இல்லை’- பாக். செய்தியாளர்களிடம் இலங்கை வீரர் டிக்வெல்லா நகைச்சுவை

இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா.
இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா.
Updated on
1 min read

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல் பிண்டியில் 11ம் தேதியன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான வியாழனன்று போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முன் கூட்டியே முடிக்கப்பட்டது.

அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா கேள்விகளுக்குப் பதில் அளித்தார், அதில் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் டிக்வெல்லாவை அதிக ஸ்கோர் எடுத்த (இன்று 87 நாட் அவுட்) தனஞ்ஜய டி சில்வா என்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பினார்.

அந்தப் பத்திரிகையாளரை அப்போதுதான் திருத்தினார் டிக்வெல்லா, அதாவது நான் நீங்கள் நினைக்கும் டி சில்வா இல்லை நான் டிக்வெல்லா என்று திருத்தினார். உடனெ அந்த பத்திரிகையாளர் நன்றி என்றார்.

ஆனால் உடனேயே இன்னொரு பத்திரிகையாளர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு ‘நீங்கள் நன்றாக ஆடினீர்கள், சதம் அடிப்பீர்களா?’ என்றார். அதற்கும் மீண்டும் பொறுமையாக டிக்வெல்லா, ‘யார் நானா? நான் டிசில்வா இல்லை, நான் டிக்வெல்லா, நான் அவுட் ஆகிவிட்டேன். ஏற்கெனவே அவுட் ஆகி பெவிலியனில் இருக்கிறேன். 2வது இன்னிங்ஸாக இருந்தால் ஆம்.’ என்றார்.

இதனால் செய்தியாளர்கள் மத்தியில் லேசான சிரிப்பலை எழுந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in