

பெர்த்தில் நடைபெறும் பகலிரவு பிங்க் நிறப்பந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2ம் நாளான இன்று ஆஸி. வீரர் லபுஷேன் முதல் ஆஸி. வீரர் என்ற சாதனை ஒன்றையும் உலகில் 3வது வீரர் என்ற ஒரு சாதனையை நிகழ்த்துவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்.
ஆம், முதல் நாள் ஆட்ட முடிவில் 110 ரன்கள் என்று தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட லபுஷேன், இன்று 143 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் வாக்னர் ரவுண்ட் த விக்கெட்டில் 130 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீச அந்தப் பந்தை ஆஃப் திசையில் நகர்ந்து ஃபைன் லெக்கில் பிளிக் செய்யும் நடைமுறையில் லெக் ஸ்டம்பை காட்டிக் கொண்டிருக்க, வாக்னர் பந்து லெக் ஸ்டம்பைப் பெயர்த்தது.
லபுஷேன் 18 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாக்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி சற்று முன் வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் 41 ரன்களுடனும், டிம் பெய்ன் 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.
லபுஷேன் 150 ரன்களை எடுத்திருந்தால் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 150 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற உயர்தரப் பட்டியலில் இணைந்திருப்பார், அதோடு இதனைச் செய்யும் முதல் ஆஸ்திரேலிய வீரராகவும் இருந்திருப்பார்.
உலகிலேயே 3 தொடர் 150+ ஸ்கோர்களை எடுத்தவர்கள் இருவர்தான், இருவருமே பாகிஸ்தான் வீரர்கள், ஒன்று ஜாகீர் அப்பாஸ் (1982-83), இரண்டு முதார்சர் நாஸர் (1983).
லபுஷேன் இந்தப் பட்டியலில் இணைந்திருப்பார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ’ஷஃபுல்’ செய்து ஆடி பவுல்டு ஆனார்.