

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான மார் னஷ் லபுஷான் சதம் அடித்தார்.
பெர்த் நகரில் நேற்று தொடங்கிய இந்த பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் 9 ரன்னில் காலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்ட மிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 74 பந்து களில், 4 பவுண்டரிகளுடன் 43 ரன் கள் எடுத்த நிலையில் நெய்ல் வாக்னர் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து மார்னஷ் லபுஷா னுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை சிறப்பாக கட்டமைத் தார். பொறுமையாக விளையாடிய ஸ்மித் 164 பந்துகளில், 4 பவுண் டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட் டுக்கு லபுஷானுடன் இணைந்து ஸ்மித் 132 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட் 12 ரன்னில் சவுதி பந்தில் போல்டானார்.
நிலைத்து நின்று விளையாடிய லபுஷான் 166 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் தனது 3-வது சதத்தை விளாசினார். நேற் றைய முதல் நாள் ஆட்டத்தின் முடி வில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர் களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. லபுஷான் 110, டிரெவிஸ் ஹெட் 20 ரன் களுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் வாக்னர் 2 விக்கெட்களையும் சவுதி, கிராண் ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.