தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நியமனம்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நியமனம்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 3 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் எதிர்ப்பு, ஊழல், மோசமான நிர்வாகக் குற்றச்சாட்டுகள் என்ற குழப்பமான ஒரு நிலையில் கிரேம் ஸ்மித் தனது பணிகளை உடனடியாகத் தொடங்குகிறார்.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது, கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்தநாளான பாக்சிங் டேயில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

இந்தத் தொடர் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், இது மார்ச் 7ம் தேதி முடிகிறது, இதுவரை ஸ்மித் இயக்குனராக நீடிப்பார் என்று தெரிகிறது.

ஐபிஎல் 2020-ல் வர்ணனையாளராக ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், தொடர்ச்சியாக அவர் இயக்குனராக நீடிப்பது கடினம் என்று தெரிகிறது.

“கடினமான காலங்களில் நான் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு உதவத் தயாராக இருப்பதாகவே பொதுவெளியில் நான் பலமுறை கூறியிருக்கிறேன், இப்போது வாய்ப்பு வந்துள்ளதில் மகிழ்ச்சி” என்றார் கிரேம் ஸ்மித்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in