மும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை

மும்பை டி20: கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் புதிய சாதனை
Updated on
1 min read

மும்பையில் நடைபெற்று வரும் 3வது இறுதி டி20 போட்டியில் இந்திய அணி அடி வெளுத்து வாங்கி வருகிறது. 16 ஓவர்களில் 176/2 என்று ஆடி வருகிறது.

கேப்டன் விராட் கோலி 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 25 ரன்களுடனும், கே.எல்.ராகுல் அனாயாச அதிரடியில் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உடன் 76 ரன்கள் எடுத்தும் ஆடிவருகின்றனர்.

இதில் கேப்டன் விராட் கோலி இந்தியாவில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்த முதல் வீரர் ஆனார். நியூஸிலாந்தின் கப்தில் மற்றும் மன்ரோ ஆகியோர் நியூஸ்லாந்தில் 1,000 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளனர்.

முன்னதாக ரோஹித் சர்மா தனக்கேயுரிய காட்டடியில் 400 வது சர்வதேச சிக்சர்களை எடுத்து குறைந்த போட்டிகளில் 400 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். மேலும் கெய்ல், அப்ரீடிக்குப் பிறகு 400 சிக்சர்கள் மைல்கல்லை கடந்த ஒரு வீரர் ஆனார் ரோஹித் சர்மா.

அதே போல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in