

டி20 போட்டிகளில் முக்கிய பவுலர்களுக்கு ஓய்வு அளிப்பதை நியதியாக வைத்துக் கொண்டிருக்கும் இந்திய அணி திடீரென மும்பையில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமியை அணியில் சேர்த்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் ஐபிஎல் 2019 தான் இதற்குக் காரணம். ஐபிஎல் 2019-ல் இந்தியாவில் வேகப்பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு ஐபிஎல் 2019-ல் 7 போட்டிகளில் வேகப்பந்து வீச்சுக்கு 62 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. ஸ்பின் பந்து வீச்சில் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளே கிடைத்துள்ளன.
ஸ்பின் பவுலிங்கிற்கு 32 பந்துகளில் ஒரு விக்கெட் வீதம் விழுந்துள்ளது வேகப்பந்து வீச்சில் 18 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதத்தில் விழுந்துள்ளது.
சராசரியை எடுத்துக் கொண்டாலும் சராசரியாக வேகப்பந்து வீச்சில் 27 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால் ஸ்பின்னில் 40 பந்துகளுக்கு ஒருவிக்கெட் தான் விழுந்துள்ளது, இதனையடுத்தே ஜடேஜாவுக்கு பதில் ஷமியை களமிறக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.