Published : 11 Dec 2019 06:52 PM
Last Updated : 11 Dec 2019 06:52 PM

வெற்றிகர விரட்டலுக்கு பெயர் பெற்ற வான்கடேயில் மே.இ.தீவுகள் முதலில் பீல்டிங் தேர்வு : ஷமி, குல்தீப் அணியில் 

மும்பை வான்கடே மைதானத்தில் டி20யில் விரட்டல் அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்று அங்கு அனுபவ சாலியான ரோஹித் சர்மா பேட்டியில் கூறியிருந்தார், தற்போது 3வது இறுதி, வாழ்வா சாவா போட்டியில் மே.இ.தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து இலக்கை விரட்ட முடிவெடுத்துள்ளது.

இந்திய அணியில் ஜடேஜா, சாஹல் உட்கார வைக்கப்பட்டு மொகமது ஷமி, குல்தீப் யாதவ் அணிக்குத் திரும்பியுள்ளனர். சாம்சன் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்படாமலேயே தொடர் முடியப்போகிறது.

டாஸ் பற்றி விராட் கோலி கூறும்போது, “முன்பு நாங்கள் முதலில் பேட் செய்ய கொஞ்சம் பதற்றமடைவோம். இப்போது அதிலிருந்து முன்னேற விரும்புகிறோம். டி20-யில் பீல்டிங் தான் மிக முக்கியம். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்திருந்தால் கடந்த போட்டி மாறிப்போயிருக்கும்.

என்ன ஸ்கோர் இலக்கு என்பதை சிந்திக்காமல் ஆடப்போகிறோம், யார் அடித்து ஆடினாலும் அவர்கள் அரைசதத்திலிருந்து அப்படியே 80-90 ரன்களை நோக்கிச் செல்ல வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றமில்லை. மும்பை இந்தியன்ஸுக்காக வான்கடேயில் ஏகப்பட்ட போட்டிகளை ஆடிய கெய்ரன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x