Published : 10 Dec 2019 03:21 PM
Last Updated : 10 Dec 2019 03:21 PM

தமிழ்நாடு பிரீமியர் லீகில் ஆடிய பேட்டிங் ஆல்ரவுண்டர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஞ்சியில் சாதனை

பேட்டிங் ஆல்ரவுண்டராகக் கருதப்படும் மேகாலயா அணியின் வீரர் சஞ்சய் யாதவ் நாகாலாந்துக்கு எதிராக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஞ்சி கோப்பை சாதனைப் புத்தகத்தி இடம் பிடித்தார்.

பேட்டிங்கில் வல்லவரான இவர் இடது கை சுழற்பந்து வீசக்கூடியவர். இவர்தான் மும்பை அணியை சையத் முஷ்டாக் அலி டிராபியில் மேகாலயா அணி தோற்கடிக்கக் காரணமாக இருந்தவர்.

இந்நிலையில் நாகாலாந்துக்கு எதிராக இன்று 22 ஓவரகள் வீசி 7 மெய்டன்களுடன் 52 ரன்களை மட்டுமே கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்கு (தற்போது விபி காஞ்சி வீரன்ஸ்) ஆடியவர், இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை 2017 ஐபிஎல் ஏலத்தில் ரூ.10 லட்சம் தொகைக்கு ஏலம் எடுத்தது.

இந்நிலையில் முதல் தர கிரிக்கெட்டில் இவர் அறிமுகம் ஆகும் போட்டியிலேயே 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கடந்த செப்.24ம் தேதி விஜய் ஹஜாரே டிராபியில் அறிமுகமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x