

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் விளையாட்டுத் துறையில் அதிக லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டபட்ட ட்விட்டர் பதிவாக தோனிக்கு கோலி பிறந்த நாள் வாழ்த்து கூறும் பதிவு இடம்பெற்றுள்ளது.
ட்விட்டர் இந்தியா #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் 2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் நடந்த சாதனைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதில் பொழுதுபோக்கு, அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைகளில் உள்ள பிரபலங்கள் (லைக், ரீட்விட், ட்வீட், கமெண்ட், ரசிகர்களுடான உரையாடல்) பலரது சாதனைகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் விளையாட்டு துறையில் அதிக லைக் மற்றும் ரீட்வீட்களுக்கான ட்விட்டர் பதிவை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டனான தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் பதிவு அதிக லைக் மற்றும் ரீட்வீட்டுகளை பெற்று மக்களின் மனதை கவர்ந்து முதலிடம் பெற்றுள்ளது ட்விட்டர் இந்தியா தளம் தெரிவித்துள்ளது.
கோலி, தோனிக்கு பதிவிட்டுள்ள அந்த பிறந்த நாள் வாழ்த்து பதிவை சுமார் 4 லட்சத்துக்கு அதிகமான நபர்கள் லைக் செய்துள்ளனர். 45 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் ரீ ட்வீட் செய்துள்ளனர்.
ட்விட்டர் இந்தியாவின் இந்த அறிவிப்பு தோனி மற்றும் கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
In the world of sports, this Tweet from @imVkohli stole people's hearts