ரஹானே அருமையான சதம்: இந்தியா 300 ரன்கள் முன்னிலை

ரஹானே அருமையான சதம்: இந்தியா 300 ரன்கள் முன்னிலை
Updated on
1 min read

கொழும்பு டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானே சதம் எடுத்து ஆடி வருகிறார். இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெற்றது.

உணவு இடைவேளியின் போது 182 ரன்களில் இருந்த ரஹானே, உணவு இடைவேளை முடிந்து சற்று முன் கவுஷாலின் ஆஃப் ஸ்பின்னை பைன் லெக் திசையில் தட்டிவிட்டு 1 ரன் எடுத்து தனது 4-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார்.

213 பந்துகளைச் சந்தித்த ரஹானே அதில் 7 பவுண்டரிகளை அடித்தார். மறு முனையில் ரோஹித் சர்மா 17 ரன்களுடன் ஆடி வருகிறார்.

3-ம் நிலை என்ற சவாலை எதிர்கொண்ட ரஹானே முதல் இன்னிங்சில் சரியாக ஆடாததை கவனத்தில் கொண்டு 2-வது இன்னிங்சில் மிக முக்கியமான சதத்தை அணிக்காக எடுத்துள்ளார்.

ரஹானேயை 99 ரன்களில் நெருக்கடி கொடுத்தார் மேத்யூஸ், நெருக்கமான பீல்டிங் அமைப்புடன் இறுக்கமான பந்து வீச்சும் அமைய, பொறுமை காத்தார் ரஹானே.

பிட்சில் பந்துவீச்சுக்கும் உதவி இருந்தாலும், நின்று நிதானம் காண்பித்தால் பேட்டிங்கும் ஆடமுடியும் என்ற நிலையே உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in