

ராணுவத்தில் பாராசூட் ரெஜிமெண்டில் பணியாற்றித் திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, சில முக்கிய ராணுவ வீரர்களின் வாழ்க்கை மற்றும் ராணுவ பணிகள் குறித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோனி மற்றும் ஸ்டூடியோனெக்ஸ்ட் இணைந்து இந்தத் தொலைக்காட்சித் தொடரை தயாரிக்கவிருப்பதாகத் தெரிகிறது.
“பரம்வீர் சக்ரா, அசோக சக்ரா விருதுகளை வீரதீரத்துக்காகப் பெற்ற சிறப்புவாய்ந்த ராணுவ அதிகாரிகளைப் பற்றிய ஒரு சுவையான தொடராக இது அமையும் என்றும் இந்தத் தொடர் 2020-ல் வெளியாகலாம்” என்று தொலைக்காட்சி வட்டாரங்கள் தனியார் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளது.
நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்த ராணுவ அதிகாரிகள் பற்றிய தொடராக இது அமையும்.
இந்த தொடர் ஷூட்டிங்குக்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக ஆடாத தோனி ஒரு பேட்டியின் போது ‘ஜனவரி வரை என்னை எதுவும் கேட்காதீர்கள்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.