Published : 07 Dec 2019 02:52 PM
Last Updated : 07 Dec 2019 02:52 PM

 கோலியைப் பாராட்டிய அமிதாப் பச்சன்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் விராட் கோலிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் டி20 போட்டியில் ஹைதராபாத்தில் நேற்று மே.இ.தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை இந்திய அணியின் கேப்டன் கோலி (94 நாட் அவுட்) சிறப்பாக விளையாண்டு தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக கோலிக்கு நேற்று ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இந்த நிலையில் கோலியை பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ நான் உங்களுக்கு எவ்வளவு முறை கூறுவது, கோலியை கிண்டல் செய்யாதீர்கள் என்றறு... ஆனால் நீங்கள் எனது பேச்சை கேட்கவில்லை. மேற்கிந்திய தீவுகளின் முகத்தை பாருங்கள். கோலி தனது ஆட்டத்தின் மூலம் கொன்று விட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x