

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று 19 தங்கம், 18 வெள்ளி, 4 வெண்கலம் என 41 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினர்.
மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் அபா கதுவா 15.32 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் கச்சனா சவுத்ரி (13.66) வெண்கலப் பதக்கம் கைப்பற்றி னார். ஆவடருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹர்ஜித் சிங், குரிந்தர்விர் சிங், பிரணவ், அமியா குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 0:39.97 விநாடிகளில் கடந்து வெள் ளிப் பதக்கம் பெற்றது.
மகளிருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா ராய், சந்திரலேகா, அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி ஆகியோரை உள்ளடக் கிய இந்திய அணி பந்தய தூரத்தை 0:45:36 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
ஆடவருக்கான குண்டு எறி தலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.03 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். தெற்காசிய விளையாட் டில் இதற்கு முன்னர் கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவைச் சர்ந்த பகதூர் சிங் சாகோ 19.15 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த பருல் சவுத்ரி (16:57.49) வெள்ளிப் பதக்கமும், பிரிதி லம்பா (17:09.32) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜபிர் மதரி (51.42) வெள்ளிப் பதக்கமும், சந்தோஷ் குமார் (51.98) வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வீர்பால் கவுர் (1:01:38) வெண்கலப் பதக்கம் கைப் பற்றினார். ஆடவருக்கான 5 ஆயி ரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சுனில் தவார் (14:55.21) வெள்ளி பதக்கம் வென்றார்.
பாட்மிண்டனில் மகளிர் ஒற்றை யர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தி யாவின் அஷ்மிதா சாலிஹா 21-18, 25-23 என்ற நேர் செட்டில் சக நாட்டைச் சேர்ந்த காயத்ரி கோபி சந்த்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிறில் வர்மா 17-21, 23-21, 21-13 என்ற செட்டில் சகநாட்டைச் சேர்ந்த ஆர்யமான் டாண்டனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ், கிருஷ்ண பிரசாத் கராகா ஜோடி 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் தியாஸ், புவனேகா குணதிலகே ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ், மேக்னா ஜக்காம்புடி ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற் றையர் பிரிவில் இந்தியாவின் அமல் ராஜ் சகநாட்டைச் சேர்ந்த ஹர்மித் தேசாயை 6-11, 9-11, 10-12, 11-7, 11-4, 11-9, 11-7 என்ற செட் கணக் கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென் றார். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா 8-11, 11-8, 6-21, 11-4, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த அஹிகா முகர் ஜிஜை வீழ்த்தி தங்கம் வென்றார்.
வாள்வீச்சு
வாள்வீச்சில் மகளிருக்கான ஃபாயில் பிரிவில் இந்தியாவின் வாங்கெல்பம் தோய்பி தேவி தங்கப் பதக்கமும், ராதிகா பிரசாத் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆடவருக்கான சேபர் பிரிவில் இந்தியாவின் கரன் சிங் தங்கப் பதக்கமும் குமரேசன் பத்மா கிஷோ நிதி வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி னர். இதேபோல் ஆடவருக்கான எப்பி பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் தங்கப் பதக்கமும், ஜெயபிர காஷ் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
பளு தூக்குதல்
பளு தூக்குதலில் ஆடவருக் கான 73 கிலோ எடைப் பிரிவில் அச் சிந்தா ஷூலியும், மகளிருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் ராக்கி ஹால் டரும், 71 கிலோ எடைப் பிரிவில் மன்பிரீத் கவுரும் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவருக்கான 81 கிலோ எடைப் பிரிவில் அஜய் சிங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி னார்.
சைக்கிள் பந்தயத்தில் மகளிர் பிரி வில் எலாங்பாம் ஷோபா தேவியும், ஆடவர் பிரிவில் ஜான் நவீன் தாமஸ், அர்விந்த் பன்வார் ஆகியோ ரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
பதக்க பட்டியல்
5-வது நாளின் முடிவில் இந்தியா 81 தங்கம், 59 வெள்ளி, 25 வெண் கலம் என 165 பதக்கங்களுடன் பட்டி யலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நேபாளம் 41 தங்கம், 27 வெள்ளி, 48 வெண்கலம் என 116 பதக்கங்களுடன் 2-வது இடம் வகிக்கிறது.