Published : 07 Dec 2019 08:44 AM
Last Updated : 07 Dec 2019 08:44 AM

அதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டிய இந்திய அணி : முதல் டி20 சுவாரஸ்யத் தகவல்கள்

முதல் டி20 போட்டியில் ஹைதராபாத்தில் நேற்று மே.இ.தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை இந்திய அணி கோலி (94 நாட் அவுட்), ராகுல் அரைசதங்களுடன் வெற்றிகரமாக விரட்டியது. இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள் சில.

முன்னதாக் 2009-ல் இலங்கைக்கு எதிராக 207 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டியதே இந்திய அணியின் அதிகபட்ச டி20 விரட்டலாக இருந்தது, ஆனால் நேற்று 208 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி முந்தைய சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20-யில் 5வது பெரிய வெற்றி விரட்டலாகும் இது.

3 முறை 200க்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக இந்திய அணி விரட்டியுள்ளது. மற்ற அணிகளை ஒப்பிடும் போது இந்திய அணிதான் அதிக முறை 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளது.

2016-ல் அடிலெய்டில் ஆஸி.க்கு எதிராக 90 நாட் அவுட்டுக்குப் பிறகு விராட் கோலி நேற்று 94 நாட் அவுட் என்று தன் அதிகபட்ச டி20 தனிப்பட்ட ஸ்கோரை எட்டினார். டி20-யில் விராட் கோலியின் 23வது அரைசதமாகும் இது, அதே போல் 6 சிக்சர்களும் கோலி அதிகபட்சமாக அடித்த சிக்சர்களாகும்.

உள்நாட்டில் டி20 விரட்டலில் இந்தியாவின் வெற்றி-தோல்வி விகிதம் 10:2 ஆகும்.

மே.இ.பவுலர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் கொடுத்த 60 ரன்கள் வெஸ்ட் இண்டிஸ் பவுலர் ஒருவர் கொடுக்கும் அதிகபட்ச டி20 ரன்களாகும்.

29 இன்னிங்ஸ்களில் ராகுல் டி20யில் 1000 ரன்களை எடுத்துள்ளார். பாபர் ஆஸம் 26 இன்னிங்ஸ், கோலி 27 இன்னிங்ஸ்.

கோலிக்கு நேற்று 12வது ஆட்ட நாயகன் விருது கிடைத்தது, டி20யில் இதில் ஆப்கான் வீரர் முகமது நபியைச் சமன் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x