Published : 06 Dec 2019 09:51 AM
Last Updated : 06 Dec 2019 09:51 AM

ஹைதராபாத்தில் இன்று இரவு இந்தியா - மே.இ.தீவுகள் டி 20-ல் மோதல்: நெருக்கடியில் களமிறங்குகின்றனர் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்

பயிற்சியின் போது சற்று இளைப்பாறிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. படம்: ஏஎப்பி

ஹைதராபாத்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3 ஆட்டங் கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத் தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த அணியை தேர்வு செய்வதற் கான முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி சந்திக்கிறது.

வங்கதேச டி 20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் டாப் ஆர்டர் பேட்டிங் வலுப்பெறும். ஷிகர் தவண் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காததால் ரோஹித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

ஒருநாள் போட்டி, டெஸ்ட் அணி யில் தனக்கான இடத்தை இழந் துள்ள கே.எல்.ராகுல் டி 20 அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள் ளார். இதேநிலைதான் ரிஷப் பந்த் துக்கும் உள்ளது. உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு குறுகிய வடி விலான கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்தாலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் பல்வேறு ஆட்டங்களில் எளிதான முறையில் தனது விக் கெட்டை பறிகொடுத்து கடும் விமர் சனங்களையும் சந்தித்தார். மேலும் விக்கெட் கீப்பிங் பணியிலும் சறுக் கலை சந்திப்பது அவருக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கி உள்ளது. வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன் காத் திருப்பது, தோனி மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளது ஆகி யவற்றால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் பந்த். ஒருவேளை இந்தத் தொடரிலும் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட தவறினால் அணியில் தனது இடத்தை இழக்க நேரிடக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறக்கூடும். ஒரு வேளை மொகமது ஷமி 3-வது வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற் றால் ஷிவம் துபே வெளியே அமர வைக்கப்படலாம். புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் களமிறங்குகிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி யானது தனது சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டி 20 தொடரை இந்தியாவிடம் இழந் திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க அந்த அணி முயற்சிக்கக்கூடும். எனினும் சமீபத்தில் லக்னோவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-2 என தோல்வி கண்டிருந்தது.

இது அந்த அணிக்கு பின்னடை வாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ் தான் தொடரில் மேற்கிந்தியத் தீவு கள் அணியானது வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி யது. இதனால் வலுவான இந்திய பந்து வீச்சு தாக்குதல் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். சீனியர் ஆல்ரவுண்டரான கெய்ரன் பொலார்டு முன்னுதாரணமாக அணியை வழிநடத்தக் கூடும் என கருதப்படுகிறது.

அனுபவ வீரர்களான கார்லோஸ் பிராத் வெயிட், ஆந்த்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ ஆகியோர் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப் படவில்லை. எனினும் பேட்டிங்கில் எவின் லிவீஸ், சிம்ரன் ஹெட்மையர், லென்டில் சிம்மன்ஸ் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இளம் வீரர்களான பிரண் டன் கிங், ஹாரி பியரே, ஷெர் பான் ரூதர்போர்டு, கெஸ்ரிக் வில்லி யம்ஸ், ஹைடன் வால்ஸ் ஆகி யோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சஞ்சு சாம் சன், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி.

மேற்கிந்தியத் தீவுகள்: கெய்ரன் பொலார்டு (கேப்டன்), எவின் லிவீஸ், சிம்ரன் ஹெட்மையர், ஹாரி பியரே, லென்டில் சிம்மன்ஸ், கீமோ பால், ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், பிரண்டன் கிங், தினேஷ் ரம்தின், ஷெல்டன் காட்ரெல், ஷெர் பான் ரூதர்போர்டு, ஹைடன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

ரிஷப் பந்த்துக்கு ஆதரவு தேவை: கோலி

ஹைதராபாத்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: ரிஷப் பந்த்தின் திறமை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். சிறப்பாக செயல்படுவது வீரரின் பொறுப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் அதற்கான இடத்தை அவருக்கு கொடுப்பதும், ஆதரிப்பதும் எங்களது பொறுப்பாகும். ரிஷப் பந்த் ஆதரவை பெறவேண்டும். நீங்கள் அதை கொடுக்காவிட்டால் அது அவமரியாதைக்குரியது.

டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணிக்கு வேகப்பந்து வீச்சு துறையில் இன்னும் ஒரு வீரர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டியது உள்ளது. 3 பேர் தங்களது இடத்தை உறுதி செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் மீதமுள்ள இடத்துக்கு இரு வீரர்கள் முன்னணியில் உள்ளனர். டி 20 கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்யும் போதும், குறைந்த அளவிலான இலக்கை பாதுகாத்துக் கொள்வதிலும் நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதாக நினைக்கவில்லை.

இதனால் இந்த இரு விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அணியாக சவால்களைக் கொண்டிருப்பதும், உலகக் கோப்பையை வெல்வதும் எப்போதுமே சிறப்பானதுதான். அதை நிகழ்த்துவதற்கு அணியின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

நாங்கள் கணிக்க முடியாத அணியாக இருக்க வேண்டும். டி 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சில் 6 தேர்வுகள் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை விதி. 5 பந்து வீச்சாளர்களும் தலா 4 ஓவர்களை சிறப்பாக வீசுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆட்டத்துக்குள் செல்ல முடியாது. இதுதான் நாங்கள் அணியில் உருவாக்க வேண்டிய சமநிலை என்று கருதுகிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

நேரம்: இரவு 7

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x