Last Updated : 05 Dec, 2019 10:32 AM

 

Published : 05 Dec 2019 10:32 AM
Last Updated : 05 Dec 2019 10:32 AM

ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்: ஆஸி.யை வெறுப்பேற்றிய மைக்கேல் வான்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் பாகிஸ்தான் அங்கு 0-2 என்று ஒயிட்வாஷ் டெஸ்ட் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் இந்தியா மட்டுமே ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

அதுவும் குறிப்பாக விராட் கோலி தலைமை இந்திய அணிக்கே இத்தகைய திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானை அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னின்ங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தங்கள் வெற்றி வாகையை 6-0 என்று உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமை நடப்பு இந்திய அணியே வெல்வதற்கான உத்திகளையும் உபகரணங்களையும் கொண்டுள்ளது என்று இந்திய அணிக்குப் புகழாரம் சூட்டி ஆஸி.யை வெறுப்பேற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x