

தெற்காசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் மாலத் தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனையான அஞ்சலி சந்த், ரன்கள் எதையும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
நேபாளத்தில் உள்ள போக்ரா வில் தெற்காசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டி 20 ஆட்டத்தில் நேற்று மாலத்தீவு - நேபாளம் மோதின. முதலில் பேட் செய்த மாலத்தீவு 11 ஓவர்களில் 16 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மித வேகப்பந்து வீச்சாளரான அஞ்சலி சந்த் 2.1 ஓவர்களை வீசி ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு வீராங்கனையான மாஸ் எலிசா 3 ரன்களுக்கு 6 விக் கெட்களை வீழ்த்தியதே மகளிர் டி 20 கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது.
இதனை தற்போது முறி யடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் அஞ்சலி சந்த். தொடர்ந்து விளையாடிய நேபாளம் 0.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.