Published : 02 Dec 2019 02:15 PM
Last Updated : 02 Dec 2019 02:15 PM

வார்னரின் முச்சதம்; காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்டுப் பாராட்டிய மனைவி

பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் முச்சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் வார்னரை அவரது மனைவி பாராட்டியுள்ளார்.

அடிலெய்டில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. வார்னரின் முச்சதம், லாபுசாங்கேவின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 335 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் வார்னருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதங்கள் விளாசிய வார்னரை அவரது மனைவி கேண்டிஸ் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பொன்மொழியைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

வார்னரின் ஆட்டம் குறித்து அவர் கூறுகையில், “வலிமை உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்திலிருந்து வரும் பண்பு” என்ற மகாத்மா காந்தியின் பொன்மொழியை அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ''மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்” என்றும் வார்னருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த முச்சதத்தின் மூலம்அதிவேகமாக முச்சதம் அடித்தவர்கள் வரிசையில் 4-வது வீரர் என்ற பெருமை வார்னருக்குக் கிடைத்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டு பின்னர் அணிக்குத் திரும்பிய டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x