Published : 01 Dec 2019 10:01 AM
Last Updated : 01 Dec 2019 10:01 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து: சென்னை சிட்டி எஃப்.சி. அணியுடன் மணிப்பூர் டி.ஆர்.ஏ.யு. இன்று மோதல்

கோவை

`ஹீரோ ஐ லீக்` கால்பந்து போட்டித் தொடரில் சென்னை சிட்டி எஃப்.சி. அணி (சிசிஎஃப்சி) கோவையில் இன்று (டிச. 1) நடைபெறும் முதல் ஆட்டத்தில் மணிப்பூரின் டி.ஆர்.ஏ.யு. கால்பந்து அணியுடன் மோதவுள்ளது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில், `ஹீரோ ஐ லீக்` கால்பந்து போட்டி, நாட் டின் பல்வேறு நகரங்களில் நடை பெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் பங்கேற்றுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி எஃப்.சி. அணி இந்த சீசனில் 20 ஆட்டங்களில் வெவ்வேறு அணிகளுடன் மோது கிறது. இதில் 10 ஆட்டங்கள் கோவையில் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 7 மணியளவில் நடை பெறுகிறது. இதில், மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலைசேர்ந்த டி.ஆர்.ஏ.யு. அணியுடன், சென்னை அணி மோதுகிறது.

இதுகுறித்து சிசிஎஃப்சி அணி யின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ், வீரர் ரஞ்சித் சிங் பாண்ட்ரே ஆகியோர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறும் போது, “கடந்த ஆண்டு சாம்பி யன்ஷிப் பட்டம் வென்றிருந் தாலும், நடப்பாண்டில் வெற்றியை எளிதாக ருசிக்க முடியாது. ஏனெ னில், அனைத்து அணிகளும் இப் போட்டிக்கு தங்களை கடுமையாக தயார் செய்துள்ளன.

அதேபோல, சென்னை சிட்டி எஃப்.சி. அணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முறையும் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத் துள்ளோம். உள்ளூர் மைதானங் களில் நடைபெறும் ஆட்டங்களில் ரசிகர்களின் கைதட்டலும், உற்சாக மும் மிகுந்த ஊக்கமளிக்கும். மணிப்பூர் அணி வீரர்கள் உறுதி மிக்க கால்களைக் கொண்டவர் கள். எனவே, முதல் போட்டி கடுமையாகவும், சுவாரஸ்யமாக வும் இருக்கும். எனினும், இப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

மணிப்பூர் டி.ஆர்.ஏ.யு. அணியின் பயிற்சியாளர் டக்ளஸ் டிசில்வா, வீரர் குர்ப்ரீத் சிங் ஆகியோர் கூறும்போது, "ஐ லீக் போட்டியின் இரண்டாவது டிவிஷன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, ஐ லீக் பிரதான போட்டியில் தற்போது பங்கேற்க உள்ளோம்.

முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த சிசிஎஃப்சி அணியுடன் மோதுகிறோம். எனினும், ஏற்கெனவே மேற்கொண்ட தொடர் பயிற்சி எங்களுக்கு வெற்றியைத் தரும் என்று நம்புகிறோம். எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முனைப்புடன் விளையாடுவோம்" என்றார்.

கோவையில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற உள்ள இந்தப் போட்டியை `டி ஸ்போர்ட்ஸ்' நேரடியாக ஒளிபரப்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x