

நூர்சுல்தானில் இன்று நடந்த டேவிஸ் கோப்பை ஓசேனியா பிரிவில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பாகிஸ்தான் ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் லியாண்டர் பயஸ்,ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாதனை படைத்தனர்
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் இந்தியா டேவிஸ் கோப்பையில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆசிய ஓசேனியா மண்டலம் 1 பிரிவில் டேவிஸ் கோப்பை கஜகஸ்தான் தலைநகார் நூர் சுல்தானில் நடந்து வருகிறது இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. உள்ளரங்கு மைதானத்தில் நேற்று ஆடவர் ஒற்றையர் ஆட்டங்கள் நடந்தன.
இதில், பாகிஸ்தான் வீரர் முகமது ஷோயிப்பை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் 42 நிமிடங்களில் வீழ்த்தினார் இந்திய வீரர் ராம் குமார்.
2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஹூசைபா அப்துல் ரஹ்மானை 6-0, 6-2 என்ற செட்களில் எளிதாக தோற்கடித்தார் இந்திய வீரர் சுமித் நாகல். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
இந்தச் சூழலில் இன்று ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடந்தன. இதில் இந்தியாவின் சார்பில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸுடன் அறிமுக வீரர் ஜீவன் நெடுஞ்செழியின் களமிறங்கினார். இந்திய இணையை பாகிஸ்தானின் முகமது ஷோயிப், ஹூபைஜா அப்துல் ரஹ்மான் ஜோடி எதிர்கொண்டனர்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் இணை ஷோயிப், ரஹ்மான் ஜோடியை 6-1, 6-3 என்ற செட்களில் 53 நிமிடங்களில் இந்தியாவின் பயஸ், நெடுஞ்செழியன் ஜோடி வென்றனர் .இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும், டேவிஸ் கோப்பையில் வரலாற்றில் லியாண்டர் பயஸ் ஜோடி தனது 43-வது வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.இதன் மூலம் இத்தாலி வீரர் நிகோலா பீட்ராங்ஜெலை சாதனையை முறியடித்துள்ளார்
இதுவரை டேவிஸ் கோப்பையில் பயஸ் 56 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 44 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இத்தாலி வீரர் நிகோலா 66 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
லியாண்டல் பயஸ் 44 வெற்றி சாதனையை உலகில் இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால் தற்போது இரட்டையர் ஜோடியில் டாப்10 வரிசையில் உள்ள வீரர்களில் களத்தில் விளையாடும் நிலையில் பயஸைத் தவரி மற்றவீரர்கள் இல்லை.
பெலாரஸ் ஜோடி மேக்ஸ் மிர்னி ஜோடி கடந்த 2018-ம் ஆண்டுக்குபின் டென்னிஸ் போட்டியில் களமிறங்கவில்லை. ஆதலால், இன்னும் ஒரு வெற்றியை பயஸ் வெற்றால் டென்னிஸ் உலகில் அசைக்கமுடியாத இடத்துக்குச் செல்வார்