Last Updated : 30 Nov, 2019 01:13 PM

 

Published : 30 Nov 2019 01:13 PM
Last Updated : 30 Nov 2019 01:13 PM

முச்சதம் அடித்த டேவிட் வார்னர்: 83 ஆண்டுகளுக்குப்பின் பிராட்மேனின் சாதனை முறியடிப்பு

அடிலெயடில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேரலிய வீரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் ஷார்ட்பிட்சாக வீசப்பட்ட பந்தை வைட் மிட்ஆனில் பவுண்டரி அடித்து டேவிட் வார்னர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார்

ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் டெஸ்ட்டில் அதிகபட்ச ஸ்கோர் 334 ரன்கள்தான். ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 334 ரன்கள் அடித்த ஆஸி. முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் பிராட்மேன் சாதனையை முறியடிக்க விரும்பவில்லை என்று கூறி டிக்ளேர் செய்தார்.

ஆனால், தற்போது டேவிட் வார்னர் 335 ரன்கள் சேர்த்து மார்க் டெய்லர், பிராட்மேன் சாதனையையும் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. வார்னர் 335 ரன்களிலும், மாத்யூ வாட் 38 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லாபுசாங்கே 162 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு லாபுசாங்கேவும், வார்னரும் சேர்ந்து 361 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் முதலாவது முச்சதம் இதுவாகும். கடந்த 2012-ம் ஆண்டு மைக்கேல் கிளார்க்(329) கடைசியாக இந்தியாவுக்கு எதிராக முச்சதம் அடித்திருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் முச்சதம் அடித்துள்ளார்

ஆஸ்திரேலிய அணிக்காக முச்சதம் அடிக்கும் 7-வது வீரர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல் பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட ஸ்கோராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 299 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.இதை கடந்த 1936-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார்.

இப்போது டேவிட் வார்னர் 300 ரன்கள் அடித்து, பிராட் மேனின் சாதனையை 83 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் 303 ரன்கள் அடித்தார். அதற்கு பின் தற்போது டெஸ்ட போட்டியில் வார்னர் முச்சதம் அடித்துள்ளார். மேலும், இடதுகை பேட்ஸ்மேன்களில் முச்சதம் அடித்தவர்களில் முதல் வீரர் இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா. கடந்த 2014-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 319 ரன்கள் சேர்த்திருந்தார்.

வார்னர் தனது முச்சதத்தை 389 பந்துகளில் அடித்துள்ளார்.இது அதிவேகமாக முச்சதம் அடித்தவர்கள் வரிசையில் 4-வது வீரர் எனும் பெருமையை வார்னர் பெற்றுள்ளார்.

அதிவேகமாக முச்சதம் அடித்தவர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2007-08ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்டில் 278 பந்துகளில் 300 ரன்களை எட்டினார்.

2-வதாக 2003-04-ம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக மாத்யூ ஹேடன் 362 பந்துகளில் முச்சதம் அடித்தார். 2003-04ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் 354பந்துகளில் முச்சதம் அடித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x