Published : 30 Nov 2019 10:05 AM
Last Updated : 30 Nov 2019 10:05 AM

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்; ராம்குமார், சுமித் நாகல் வெற்றி: 2-0 என முன்னிலை பெற்றது இந்திய அணி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

2020-ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசியா ஓசியானா பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி கஜகஸ் தானில் உள்ள நூர் சுல்தான் நகரில் நேற்று நடைபெற்றது.

5 ஆட்டங்களை கொண்ட இந்தத் தொடரில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இரு ஆட்டங்கள் நடை பெற்றது. முதலில் நடைபெற்ற ஆட் டத்தில் உலக தரவரிசையில் 176-வது இடத்தில் உள்ள இந்தியா வின் ராம்குமார் ராமநாதன், தர வரிசையில் இடம் பெறாத பாகிஸ் தானின் ஷோயிப் முகமதுவை எதிர்த்து விளையாடினார். 42 நிமி டங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், ஹுசைஃபா அப்துல் ரஹ்மானை எதிர்த்து விளையாடினார்.

சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடரின் 2-வது நாளான இன்று இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, முகமது ஷோயிப், ஹுசைஃபா அப்துல் ரஹ்மான் ஜோடியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து மாற்று ஒற் றையர் பிரிவு ஆட்டங்கள் நடை பெறும். இதில் ராம்குமார் ராம நாதன், ஹுசைஃபா அப்துல் ரஹ் மானையும் சுமித் நாகல், ஷோயிப் முகமதுவையும் எதிர்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x