Published : 29 Nov 2019 09:22 AM
Last Updated : 29 Nov 2019 09:22 AM

இந்தியாவுக்கு எதிரான தொடர்: மே.இ.தீவுகளின் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு

அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மே.இ.தீவுகளின் ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள், டி20 அணிகளுக்கு கிரன் பொலார்ட் கேப்டனாக இருப்பார், டி20 துணைக் கேப்டனாக நிகோலஸ் பூரனும் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஷேய் ஹோப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிச.6ம் தேதி ஹைதராபாத்தில் முதல் டி20 நடக்கிறது, பிறகு டிசம்பர் 8ம் தேதி திருவனந்தபுரத்திலும் 11ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் சென்னையில் முதல் ஒருநாள் போட்டி டிச.15ம் தேதி நடைபெறுகிறது. வைசாகில் டிச.18 இரண்டாம் போட்டியும் கட்டாக்கில் டிச.22ம் தேதி 3-வது போட்டியும் நடைபெறுகிறது.

ஒருநாள் அணி: சுனில் அம்ப்ரிஸ், ஷேய் ஹோப், கேரி பியர், ராஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், கிரன் போலார்ட் (கேப்.), காட்ரெல், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மையர், எவின் லூயிஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

டி20 அணி: ஃபேபியன் ஆலன், பிராண்டன் கிங், தினேஷ் ராம்தின், ஷெல்டன் காட்ரெல், எவின் லூயிஸ், ஷெர்பானே ருதர்போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், கேரி பியர், லெண்டில் சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், கிரன் பொலார்ட் (கேப்டன்), கீமோ பால், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், நிகோலஸ் பூரன், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x