

காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸை மனநல மருத்துவமனையில் பரிசோதனை செய்ய பிரிட்டோரியா நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். இவர், 2012-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியான ‘பாரா ஒலிம்பிக்’கில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இரு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்ட நிலையில், செயற்கை கால்கள் உதவியுடன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, பிரிட்டோரியாவில் உள்ள தனது வீட்டில் காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை பிஸ்டோரியஸ் சுட்டுக்கொன்றார். மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதாகக் கருதி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தி ருந்தார்.
ஆனால், தீவிர விசாரணை நடத்திய போலீஸார், காதலியுடன் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை பிஸ்டோரியஸ் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டினர். கைது செய்யப்பட்ட பிஸ்டோரியஸ், ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை, பிரிட்டோரியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி தோகோஜீல் மஸிபா முன்னிலையில் நடைபெற்து.
அப்போது பிஸ்டோரியஸின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், “தனது குழந்தைப் பருவத்தி லேயே கால்களை இழந்த தால் ஏற்பட்ட விரத்தி உள்ளிட்ட வற்றால் பிஸ்டோரியஸ் பாதிக்கப் பட்டுள்ளார். அவரின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமான கால கட்டமாக இருந்துள்ளது. இந்நிலையில், தனது வீட்டுக்குள் மர்ம நபர் நுழைந்துவிட்டார் என்ற எண்ணத்தால் பாதுகாப்பற்ற உணர்வுக்கு உள்ளாகி துப்பாக்கி யால் சுட்டு தற்காப்பு நடவடிக்கை யில் பிஸ்டோரியஸ் ஈடுபட்டுள் ளார்” என்றனர்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: “பிஸ்டோரியஸின் மனநிலையில் மாற்றம் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக வெஸ்கோப்பிஸ் மனநல மருத்துவமனையில் வெளிநோயாளியாக தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிஸ்டோரியஸ் சென்றுவர வேண்டும். அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்து வர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். அவரின் மனநலம் தொடர்பான அறிக்கையை 30 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மருத்துவ மனைக்கு வரும் பிஸ்டோரியஸை 3 மனநல மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதனை செய்யவுள்ளது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிஸ்டோரியஸ் மீதான வழக்கின் விசாரணை குறித்து முடிவு செய்யப்படும்.