Published : 27 Nov 2019 09:32 AM
Last Updated : 27 Nov 2019 09:32 AM

நினைத்துப் பார்க்க முடியாத கோணத்திலிருந்து கோல்: டைபலாவின் வியக்க வைத்த கோலினால் யுவண்டஸ் அணி வெற்றி

யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் நேற்று நடைபெற்ற யுவண்டஸ், அத்லெட்டிகோ மேட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் யுவண்டஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மேட்ரிட் அணியை வீழ்த்தியது.

யுவன்டஸ் அணி ஏற்கெனவே இறுதி 16 சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில் அந்த அணியின் அர்ஜெண்டினா வீரர் பாவ்லோ டைபலா அடித்த கோல் சில நாட்களுக்கு கால்பந்து அரங்கில் பேசுபொருளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்லெடிக்கோ மேட்ரிட் பகுதியில் கோலுக்கு வலது புறம் பெனால்டி பகுதியில் அத்லெடிகோ மேட்ரிட் வீரர் ஃபவுல் செய்ய அங்கிருந்து ஃப்ரீ கிக் அளிக்கப்பட்டது. ஏன் அந்தக் கோணத்திலிருடந்து நேரடியாக கோல் அடிக்க முடியாது என்றால் கோல் போஸ்ட்தான் அங்கிருந்து தெரியும். மிகவும் குறுகலான கோணம், பாஸ் செய்துதான் கோல் அடிக்க முடியும்.

ஆனால் வியக்க வைக்கும் வகையில் அந்தக் கோணத்திலிருந்து இடது காலால் ஒரு புல்லட் ஷாட்டை அடித்தார் பாவ்லோ டைபலா சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அத்லெடிகோ மேட்ரிட் கோல் கீப்பர் எம்பிப்பார்த்தார், ஆனால் கோலைத் தடுக்க முடியவில்லை. மிகப்பிரமாதமான ஒரு கடினமான கோல். 45வது நிமிடத்தில் அடித்த இந்த கோல்தான் வெற்றி கோலாகவும் அமைந்தது.

இந்த கோலின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அத்லெடிகோ மேட்ரிட் அணி சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டது, ஆனால் யுவண்டஸ் தடுப்பு வியூகம் பலமாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆனால் கடைசியில் காயத்திற்காக ஆட்டம் நிறுத்தப்பட்டதற்கான ஈடுகட்டு நேர ஆட்டத்தில் அத்லெடிகோ மேட்ரிட் ஒரு கோல் அடித்து ட்ரா செய்யும் வாய்ப்பை தவற விட்டது. கோரியா என்ற வீரர் மிக அருமையாக ஒரு ஷாட்டை அடிக்க கோல் கீப்பர் கோலை விட்டு நகர திறந்த கோல் நிலைமையிலும் கூட அத்லெடிகோ வீரர் அல்வாரோ மொராட்டா பந்தை கோலுக்குள் செலுத்துவதில் கோட்டை விட்டார்.

ஆனால் இந்த போட்டி டைபலாவின் அந்த அற்புதக் கோலுக்காக நீண்ட காலம் நினைவு வைத்துக் கொள்ளப்படுவதாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x