

ஆப்கானிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் லக்னோவில் இன்று தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான கரிம் ஜனத், நிஜாத் மசூதும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். கேப்டன் ரஷித் கான் தனது சுழலால் நெருக்கடி கொடுக்க ஆயுத்தமாகியுள்ளார். பேட்டிங்கில் ரஹ்மத் ஷா, அஷ்கர் ஆப்கன் ஆகியோரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியானது வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மையர், ராஸ்டன் சேஸ், கீமோ பால், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும்.