

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பாட்மிண்டன் வீரரான லக்சயா சென், ஸ்காட்டிஸ் ஓபனில் சாம்பி யன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 3 மாத காலத்தில் அவர் வெல்லும் 4-வது பட்டம் இதுவாகும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஸ்காட்டிஸ் ஓபன் பாட் மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரேசில் வீரர் யாகோர் கோயல்ஹோவை எதிர்த்து விளையாடினார். 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான லக்சயா சென் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 4 தொடர்களில் சாம்பி யன் பட்டம் வென்றுள்ளார். சார்லார்லக்ஸ் ஓபன், டச்சு ஓபன், பெல்ஜியன் இன்டர்நேஷனல் ஆகிய தொடர்களில் வாகை சூடிய லக்சயா சென் தற்போது ஸ்காட் டிஸ் ஓபனில் பட்டம் வென்றுள்ளார்.