

பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின் (பிபிஎல்) 5-வது சீசனில் இருந்து விலகியுள்ளார் இந்திய நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால்.
29 வயதான சாய்னா நெவால் பிபிஎல் தொடரில் வட கிழக்கு வாரியர்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ஜனவரி 20-ம் தேதி தொடங்கும் பிபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சாய்னா நெவால்.