ஐசிசி தரவரிசை: 3-வது இடத்துக்கு முன்னேறுமா இந்தியா?

ஐசிசி தரவரிசை: 3-வது இடத்துக்கு முன்னேறுமா இந்தியா?
Updated on
1 min read

இந்தியா-இலங்கை அணிகள் இடை யிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலேவில் நாளை தொடங்குகிறது.

இந்தத் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்பட்சத்தில் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தோற்கடிக்கும் பட்சத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் இலங்கையை வென்றாலே தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துவிடலாம். தற்போதைய நிலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

ஒருவேளை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவைத் தோற்கடிக்கும்பட்சத்தில் அந்த அணி மேலும் 8 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறலாம். அதேநேரத்தில் இந்திய அணி 8 புள்ளிகளை இழந்து தரவரிசை யில் 6-வது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்றாலும், தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது.

கடைசியாக 2010-ல் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது தொடர். அதே போன்று இந்தத் தொடர் சமனில் முடிந்தால் இலங்கை அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இந்திய அணி தொடர்ந்து 97 புள்ளி களுடனேயே இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in