

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 போட்டி கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத் தில் இன்று தொடங்குகிறது.
கடந்த 4 போட்டிகளில் 3-ஐ வென்று தொடரைக் கைப்பற்றி விட்ட இங்கிலாந்து, இந்த போட்டி யையும் வென்று புதிய சகாப்தம் படைப்பதில் தீவிரமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் வென்றதில்லை. அதனால் இந்தப் போட்டியில் வெல்வதில் தீவிர மாக இருக்கிறது. இதுதவிர கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலி யாவிடம் 0-5 என்ற கணக்கில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுப்பதிலும் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலிய அணியோ இந்தப் போட்டியோடு ஓய்வு பெறவுள்ள தங்களின் கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரை வெற்றியோடு வழியனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. ஜோ ரூட், கேப்டன் குக், ஜானி பேர்ஸ்டேவ், இயான்பெல், பென் ஸ்டோக்ஸ் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன் முழு உடற்தகுதி பெறாததால் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின் ஆகியோருடன் 3-வது வேகப்பந்து வீச்சாளராக மார்க் உட் களமிறங்குகிறார். சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியுள்ளது. தொடக்க வீரர் ஆடம் லித்துக்குப் பதிலாக அடீல் ரஷீத்தை களமிறக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அடீல் ரஷீத் இடம்பெறும்பட்சத்தில் மொயீன் அலி தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் இரு மாற்றங் கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஷான் மார்ஷுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷும், ஜோஷ் ஹேஸில்வுட்டுக்குப் பதிலாக பட் கம்மின்ஸும் இடம்பெற வாய்ப்புள்ளது.
போட்டி நேரம்: பிற்பகல் 3.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்