Published : 20 Nov 2019 11:53 AM
Last Updated : 20 Nov 2019 11:53 AM
டி10 கிரிக்கெட்டில் 30 பந்துகளில் 91 ரன்கள் விளாசியதையடுத்து ஆஸி. அதிரடி வீரரை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செய்த மிகப்பெரிய தவறு என்று யுவராஜ் சிங் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் என்பவர் கிண்டலா அல்லது சீரியஸா என்று தெரியாத வண்ணம் யுவராஜ் சிங்கிற்கு பதில் அளித்துள்ளார்.
வெங்கி மைசூர் தன் ட்விட்டர் பக்கத்தில், “யுவராஜ் சிங், நாங்கள் கிறிஸ் லின்னை ஏன் விடுவித்தோம் என்றால் அப்போதுதான் உங்களை நாங்கள் ஏலம் எடுக்க முடியும். சாம்பியன்களான உங்கள் இருவருக்கும் எனது அன்பு மற்றும் மரியாதைகள்” என்று ட்வீட் செய்துள்ளார்.
கிறிஸ் லின் விடுவிக்கப்பட்டதை கிறிஸ் லின்னே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர், “எனக்கு கேகேஆர் உரிமையாளர்கலுகும் நல்ல உறவு உள்ளது. எந்த ஒரு மனத்தாங்கலும் இல்லை. அந்த உறவுகளை மேலும் வலுவாகவும் இனிமையாகவும் வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்” என்றார்.
கிறிஸ் லின் 41 ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணிக்காக ஆடி 1280 ரன்களை அடித்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 140க்கும் மேல். டிசம்பர் 2020-ல் இவர் பெயர் ஏலத்தில் இடம்பெறும்போது அணிகளுக்கு இடையே இவரை ஏலம் எடுக்கக் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.