Published : 20 Nov 2019 11:27 am

Updated : 20 Nov 2019 11:27 am

 

Published : 20 Nov 2019 11:27 AM
Last Updated : 20 Nov 2019 11:27 AM

ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் பிரிஸ்பனில் நாளை தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா பாகிஸ்தான் அணி?

australian-team

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிவிளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் பிரிஸ்பன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதிகாலை 5.30 மணி அளவில் தொடங்குகிறது. கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஒரே ஒரு முறை தொடரை சமன் செய்துள்ளது.

1995-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்டில் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. அதன் பிறகுபாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் ஒருமுறை கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. கடந்த 2016-17ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 0-3 எனபடுதோல்வி கண்டிருந்தது.

இம்முறை புதிய கேப்டனான அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் பாபர் அஸாம், ஆஷாத்ஷபிக் ஆகியோரை பெரிதும் சார்ந்துள்ளது பாகிஸ்தான் அணி. இதில் அஷாத் ஷபிக் பயிற்சி ஆட்டங்களில் 2 சதங்கள் அடித்தார். அதேவேளையில் பாபர் அஸாம், ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக 157 ரன்கள் விளாசினார். இதனால் இவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சில் 16 வயதான இளம்வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாஅறிமுக வீரராக களமிறங்கக்கூடும். 19 வயதான ஷாஹீன் அப்ரீடி, மொகமது அப்பாஸ், மூத்த வீரரான இம்ரான் கான் சீனியர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கடும் சவால்கள் அளிக்கக்கூடும். எனினும் பயிற்சி ஆட்டத்தில் ஜோ பர்ன்ஸ், டிரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய ஏ அணியை 122 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்ததால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரை 2-2 என டிராவில் முடித்திருந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற பிறகு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் முதன்முறையாக சொந்த மண்ணில் டெஸ்டில் களமிறங்குகின்றனர்.

டேவிட் வார்னர் ஆஷஸ் தொடரில் 9.5 சராசரியுடன் 95 ரன்கள்மட்டுமே சேர்த்தார். அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித் 774 ரன்கள் குவித்து மிரளச் செய்தார். அவரிடமிருந்து மீண்டும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக் கூடும்.

ஆஷஸ் தொடரில் ரன்கள் குவிக்காத போதிலும் வார்னரின் இடத்துக்கு பங்கமில்லை. அவருடன் தொடக்க வீரராக பான் கிராப்டுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ் களமிறங்கக்கூடும். நடுவரிசையில் ஸ்மித்துடன், மார்னஸ் லபுஷான், டிரெவிஸ் ஹெட், மேத்யூ வேட்ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் வேகக்கூட்டணி வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியான காபாவில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகள் கொடுக்க முழுவீச்சில் ஆயத்தமாகிஉள்ளனர். 2-வது டெஸ்ட் அடிலெய்டு நகரில் பகலிரவு போட்டியாக 29-ம் தேதி நடைபெறுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஆஸ்திரேலிய அணிபிரிஸ்பனில் டெஸ்ட் போட்டிபாகிஸ்தான் அணி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author