ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு: மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி 21ம் தேதி தேர்வு

ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு: மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி 21ம் தேதி தேர்வு
Updated on
1 min read

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய நவம்பர் 21ம் தேதி (நாளை) எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கொல்கத்தாவில் கூடுகிறது.

தற்போதைய அணித்தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் புதிய தேர்வுக்குழு டிசம்பர் மாதம் தேர்வு செய்யப்படும். இதில் எல்.சிவராம கிருஷ்ணன், ஆஷிஷ் நெஹ்ரா, தீப்தாஸ் குப்தா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் தொடக்க வீரர் என்ற கூடுதல் பொறுப்பையும், கடினமான பணியையும் சுமந்திருப்பதால் அவருக்கு மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கலாம் என்று முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக ரோஹித் சர்மாவிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

ரோஹித்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அவரது இடத்துக்கு மயங்க் அகர்வாலுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம், அதிரடி வீரர் பிரிதிவி ஷாவுக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in