Published : 19 Nov 2019 08:51 PM
Last Updated : 19 Nov 2019 08:51 PM

2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன் வார்ன் ஆதங்கம் 

உள்நாட்டு கிரிக்கெட்டில் சக வீரரை தனிப்பட்ட முறையில் வசைபாடியதாக எழுந்தக் குற்றச்சாட்டில் ஜேம்ஸ் பேட்டின்சன் பிரிஸ்பனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போயிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்த ஷேன் வார்ன், 2019 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்தும் ஏமாற்றம் தெரிவித்தார்.

“பேட்டின்சன் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது, ஆஷஸ் தொடரில் அவர் தன் சிறப்பான பார்மில் இல்லாவிட்டாலும் தன் பணியைச் செவ்வனே செய்து முடித்தார். எனவே ஹேசில்வுட், கமின்ஸ் உடன் இவரும் இருந்திருந்தால் நேதன் லயனுடன் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு வலுவாக இருந்திருக்கும், ஆனால் ஏமாற்றளித்து விட்டார்.

அவர் ஆடாதது பெரிய நஷ்டம், அதனால் மிட்செல் ஸ்டார்க் ஆடுவார், ஸ்டார்க்கும் நல்ல பார்மில் இருக்கிறார்.

உலகக்கோப்பையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றது பெரும் ஏமாற்றமாக இருந்தது, அதில் வென்று குரூப்பில் டாப் இடத்தில் முடிந்திருந்தால் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை எதிர்கொண்டிருக்கும், அப்படி நிகழ்ந்திருந்தால் உலகக்கோப்பையே வித்தியாசமாக அமைந்திருக்கும்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஷேன் வார்ன்.

தென் ஆப்பிரிக்கா, அந்த போட்டியில் ஃபாப் டு பிளெசிஸ் அருமையான சதம் எடுக்க அதிரடி வீரர் வான் டெர் டியூசன் 95 ரன்கள் எடுக்க, 325 ரன்கள் குவித்தது, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி வார்னரின் 122 ரன்களுடன் இலக்கை விரட்டியது, கடைசியில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 69 பந்துகளில் 85 ரன்கள் விளாசி வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தாலும் ஆஸ்திரேலியா 49.5 ஒவர்களில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.

படுமோசமாக உலகக்கோப்பை தொடர் முழுதும் ஆடிய தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்த்து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x