

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின் றன. ஆஸ்திரேலிய அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அந்தத் தொடரை 1-0 என கைப்பற்றியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் போட்டி யில் களமிறங்குகிறது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான வீரர்களைக் கொண்டுள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை யில் உஸ்மான் கவாஜா, மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ் காம்ப், பெர்குசன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் பட்டின்சன், குரீந்தர் சாந்து, கோல்ட்டர் நீல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ஆஷ்டன் அகரை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.
தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ், கோடி ஷெட்டி., டீன் எல்கர் போன்ற பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் பியூரான் ஹென்ரிக்ஸ், ஹார்டஸ் வில்ஜோன் உள்ளிட்டோரும், சுழற்பந்து வீச்சில் கேஷவ் மகாராஜும் பலம் சேர்க்கின்றனர். விக்கெட் கீப்பர் டி காக் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவர் இன்னும் சென்னை வரவில்லை. அதனால் அவர் இந்தப் போட்டியில் ஆடமாட்டார்.
சேப்பாக்கம் மைதானம் மெதுவாக இருக்கும் என்பதால் ஆடுகளத்தின் சூழலை சரியாக கணித்து அதற்கேற்றவாறு உத்திகளை வகுப்பது இரு அணிகளின் கேப்டன்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சீன் அபாட், ஆஷ்டன் அகர், கேமரூன் பாய்ஸ், ஜோ பர்ன்ஸ், நாதன் கோல்ட்டர் நீல், கேலம் பெர்குசன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், ஜேம்ஸ் பட்டின்சன், குரீந்தர் சாந்து, ஆண்ட்ரூ ஃபெகீட்.
தென் ஆப்பிரிக்கா:
டீன் எல்கர் (கேப்டன்), டி புரூன், ரீஸா ஹென்ரிக்ஸ், வேயன் பர்னெல், லான்வாபோ சோட்சோபி, எடி லீய், ஷேஸி, கேயன் ஸோன்டோ, கேமரூன் டெல்போர்ட், ஆம்பிள் ரமீலா, டேன் விலாஸ், ஹார்டஸ் வில்ஜோன், கோடி ஷெட்டி, கேஷவ் மகாராஜ், டி காக்.
போட்டி நேரம்: காலை 9
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் போட்டியில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா.
உன்முக்த் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
உன்முக்த் சந்த் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. சீனியர் அணியில் இடம்பிடிப்பதில் தீவிரமாக இருக்கும் உன்முக்த் சந்த், வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஆகியோருக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும்.
இதேபோல் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் சீனியர் அணியில் தங்களுடைய இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியா:
உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, கருண் நாயர் (துணை கேப்டன்), கேதார் ஜாதவ், சஞ்சு சாம்சன், அக் ஷர் படேல், பர்வீஸ் ரசூல், கரண் சர்மா, தவல் குல்கர்னி, சந்தீர் சர்மா, ரஷ் கலாரியா, மன்தீப் சிங், குருகீரத் சிங், ரிஷி தவன்.