Published : 04 May 2014 12:40 PM
Last Updated : 04 May 2014 12:40 PM

டைசன் கேய்க்கு ஓர் ஆண்டு தடை: ஒலிம்பிக் பதக்கத்தை திரும்ப ஒப்படைத்தார்

ஸ்பிரிங்ஸ்ஊக்கமருந்து பயன்படுத்திய அமெரிக்க தடகள வீரர் டைசன் கேய்க்கு ஓர் ஆண்டு தடைவிதித்துள்ளது அந்நாட்டு ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு. இதையடுத்து அவர் 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை திரும்ப ஒப்படைத்தார்.

அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மற்றும் சர்வதேச தடகள சம்மேளனம் ஆகியவை 31 வயதாகும் டைசனிடம் போட்டிகள் இல்லாத நேரத்தில் இருமுறையும், போட்டி நடைபெற்றபோது ஒரு முறையும் சிறுநீர் மாதிரிகளை சேகரித்தன. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

டைசன் கேய் தனக்கு விதிக்கப் பட்ட ஓர் ஆண்டு தடையை ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அவுட்டோர் தடகளப் போட்டியின்போது அவரிடம் இருந்து மாதிரி சேகரிக் கப்பட்டுள்ளது. அது முதலே அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதியில் இருந்து இந்த ஓர் ஆண்டு தடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதால் வரும் 22-ம் தேதியோடு அவர் மீதான தடை முடிவுக்கு வந்துவிடும்.

இதுதவிர 2012 ஜுலை 15-ல் முதல்முறையாக அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளார். அதனால் அந்தத் தேதியில் இருந்து அவர் வென்ற பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் 2012 ஒலிம்பிக்கில் 4*100 மீ. ஓட்டத்தில் அவர் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழந்துள்ளார். அந்தப் பதக்கத்தை அவர் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேபோல் லண்டன் ஒலிம்பிக் கில் 100 மீ. ஓட்டத்தில் பிடித்த 4-வது இடத்தையும் இழந்துள்ளார். அதில் அவர் 9.80 விநாடிகளில் இலக்கை எட்டியிருந்தார். அதுதான் ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வெல்லாத ஒரு வீரரின் அதிகபட்ச வேகமாக இருந்தது.

டைசன் மீதான ஊக்கமருந்து விவகாரம் கடந்த ஆண்டு வெளி யானது முதலே உலக தடகள சாம்பியன்ஷிப் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகிய அவர், ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு முழு ஒத்து ழைப்பதாக தெரிவித்திருந்தார். அவர் முழு ஒத்துழைப்பு அளித்த தன் காரணமாக குறைந்தபட்ச தண்டையாக ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இல்லை யெனில் அவர் இரண்டு ஆண்டுகள் தடை பெற்றிருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x