

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில் அணிகள் தங்கள் வீரர்கள் பலரை விடுவித்துள்ளனர்.
இதில் ஆர்சிபி அதிகபட்சமாக 12 வீரர்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் அணிகள் தலா 11 வீரர்களையும், மும்பை இந்தியன்ஸ் 10 வீரர்களையும் டெல்லி கேப்பிடல்ச் 9 வீரர்களையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7 வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வீரர்களையும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 வீரர்களையும் இதுவரை தங்கள் அணிகளிலிருந்து விடுவித்துள்ளனர்.
இதில் வரும் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம்தான் அதிகபட்சத் தொகையான ரூ.42.70 கோடி கைவசம் உள்ளது.
ஐபிஎல் அணிகளிடம் கைவசம் உள்ள தொகை, எவ்வளவு உள்நாட்டு வீரர்கள், எத்தனை அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்பதைப் பார்ப்போம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கைவைசம் உள்ள தொகை ரூ.14.60 கோடி, ஏலம் எடுக்க முடியக்கூடிய வீரர்கள் 5, இதில் அயல்நாட்டு வீரர்கள் 2 பேரை எடுக்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸிடம் உள்ள தொகை ரூ.27.85 கோடி, மொத்தம் 11 வீரர்களை ஏலம் எடுக்கலாம் இதில் 5 வீரர்கள் அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம்தான் அதிகபட்சத் தொகையான ரூ.42.70 கோடி கைவசம் உள்ளது, மொத்தம் 9 வீரர்களை ஏலம் எடுக்கலாம், 4 அயல்நாட்டு வீரர்களுக்க்கு இடமுண்டு.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் உள்ள தொகை ரூ.35.65 கோடி, 11 வீரர்களை எடுக்கலாம், 4 அயல்நாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு உண்டு.
மும்பை இந்தியன்ஸ் - ரூ. 13.05 கோடி, 7 வீரர்கள் ஏலம் எடுக்கலாம் 2 அயல்நாட்டு வீரர்களூக்கான இடமுண்டு.
ராஜஸ்தான் ராயல்ஸிடம் உள்ள தொகை ரூ. ரூ.28.90 கோடி, 11 வீரர்களை எடுக்கலாம் 4 அயல்நாட்டு வீரர்கள்.
ஆர்சிபியிடம் உள்ள தொகை, ரூ.27.90கோடி, மொத்தம் 12 வீரர்களை எடுக்கலாம், 6 அயல்நாட்டு வீரர்களுக்கு இடமுண்டு.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கைவைசம் உள்ள தொகை ரூ.17 கோடி, 7 வீரர்களை ஏலம் எடுக்கலாம், 2 அயல்நாட்டு வீரர்கள்.