Published : 14 Nov 2019 07:50 PM
Last Updated : 14 Nov 2019 07:50 PM

ஷெஃபீல்ட் கிரிக்கெட்டில் விசித்திர முறையில் விக்கெட் எடுத்த ஸ்டீவ் ஸ்மித்

விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், போன்ற ஜீனியஸ்கள் தங்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பேட்டிங் தவிர, பீல்டிங், பவுலிங் என்று அசத்தி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அதிசயிக்க வைப்பது வழக்கம்.

அந்தவகையில் ஸ்டீவ் ஸ்மித், தான் ஆடும் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக அன்று சதம் எடுத்ததோடு இன்று கடைசி இன்னிங்சில் பவுலிங் வீசினார். 6 ஓவர்கள் வீசினார் அதில் 2 மெய்டன்கள், இதில் விக்கெட் ஒன்று அவருக்கு விசித்திரமாக விழுந்தது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் வலது கை பேட்ஸ்மென் ஜோஷ் இங்லைஸுக்கு ஸ்டீவ் ஸ்மித் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து லெக் ஸ்பின்னரை வீசினார், அதனை அவர் பளார் என்று அடித்தார். ஆனால் சிலி மிட் ஆஃபில் அருகில் இருந்த பீல்டர் உடலில் பட்டு அது நேராக ஷார்ட் லெக் பீல்டர் கையில் கேட்ச் ஆக மாறியது, இங்லைஸ் கடுப்புடன் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் விநோதமாக ஒரு விக்கெட்டை பெற்றார்.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி 128 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x