

2010-ம் ஆண்டு தீபக் சாஹரைப் பாராட்டி இந்திய முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் எழுத்தாளருமான ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட ட்வீட் நேற்று முதல் வைரலாகி வருகிறது.
தீபக் சாஹர் 3 நாட்களில் ஒரு சர்வதேச ஹாட்ரிக், ஒரு உள்நாட்டு ஹாட்ரிக் என்பதோடு ஒரு ஹாட்ரி வாய்ப்புக்கு இன்று நெருங்கி வந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக கைகூடவில்லை
முன்னாள் தொடக்க வீரரும் தற்போதைய கிரிக்கெட் பத்தி எழுத்தாளருமான ஆகாஷ் சோப்ரா 2010ம் ஆண்டு தன் ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தானில் ஒரு இளம் திறமையைப் பார்த்தேன், அவர் தீபக் சாஹர். இவர் பெயரை நினைவில் வைத்து கொள்ளுங்கள், இவரைப்பற்றி எதிர்காலத்தில் நிறைய கேள்விப்படுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இன்று ஹாட்ரிக் மேல் ஹாட்ரிக்காக குவித்து வரும் தீபக் சாஹரின் திறமையை அன்றே கண்ட தீர்க்க தரிசி என்று ஆகாஷ் சோப்ராவை ட்விட்டர்வாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.